tamilinfo
Monday, June 22, 2015
Saturday, June 20, 2015
இளையதளபதி விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல்
நாளை ஜுன் 22ம் தேதி இளைய தளபதி பிறந்தநாளை கொண்டாட ரசிகர்கள் தயார் ஆகி வருகின்றனர். இந்நிலையில் தற்போதே பல இடங்களில் போஸ்டர், பேனர் என கலை கட்ட ஆரம்பித்துள்ளது. இந்த 41 வருடத்தில் இளைய தளபதி தன் திரைப்பயணத்தில் கடந்த வந்த பாதை தான் இந்த பகுதி.
விஜய் தன் திரைபயணத்தில் முதன் முறையாக தன் தந்தை இயக்கத்தில் நாளைய தீர்ப்பு படத்தில் காலடி எடுத்து வைத்தார். இதை தொடர்ந்து ஒரு தனி நடிகராக விஜய் வெற்றி பெற மிகவும் சிரமங்களை சந்தித்தார். ஆரம்பத்தில் இவர் நடித்த பல படங்கள் பிளாப்பையே கொடுத்தன.
இதை தொடர்ந்து விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த பூவே உனக்காக படம் தான் இவரின் திரைப்பயணத்தில் மாபெரும் வெற்றி பெற்ற படம். இப்படத்திற்கு பிறகு பல பெண்களின் மனதை விஜய் கொள்ளையடித்தார்.
பிறகு லவ்டுடே, துள்ளாத மனமும் துள்ளும், பத்ரி, ப்ரியாமனவளே, காதலுக்கு மரியாதை, குஷி போன்ற தொடர் வெற்றியினால் இளைஞர்களின் மனதை கொள்ளையடித்தார். இதுநாள் வரை காதல் நாயகனாக வலம் வந்த விஜய் பகவதி படத்தில் ஆக்ஷன் அவதாரம் எடுக்க, இந்த முடிவு அவருக்கு தோல்வியை தான் கொடுத்தது.
ஆனால், தன் விடா முயற்சியால் திருமலை படத்தின் மூலம் தன்னை ஒரு முழு நீள ஆக்ஷன் ஹீரோவாக மக்களிடம் நிரூபித்தார். இந்த வெற்றி கில்லி, திருப்பாச்சி, சிவகாசி, மதுர என பல வெற்றிகளாக தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸின் செல்லப்பிள்ளையாக இடம்பிடித்தார்.
ஆனால், இவர் எடுத்த சில தவறான முடிவுகள் நல்ல உயரத்தில் இருக்கும் போது தொடர்ந்து 5 படங்கள் தோல்வியை காண வைத்தது. வழக்கம் போல் தன் உழைத்திடு உயர்ந்திடு என்ற தன் கொள்கையின் மூலம் துப்பாக்கியின் மூலம் இந்திய சினிமாவில் ஆச்சரியத்தில் பார்க்கும் வெற்றியை கொடுத்தார். இந்த வெற்றிநாயகனிற்கு எமது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
விஜய்யின் புலியை விரட்டி விரட்டி வேட்டையாடும் வலைஞர்கள்
வேணும் விட்ரு... அழுதுருவேன் என்று வடிவேலு பாணியில் சொன்னால் கூட விடமாட்டார்கள் போல் இருக்கிறது டுவிட்டர்வாசிகள். புலி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகியுள்ளதற்கு #PuliMemes போட்டு கலாய்த்து வருகின்றனர் வலைஞர்கள்.
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் புலி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.நேற்று இணையத்தில் வெளியான இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை விஜய் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்துடன் ரீட்வீட் செய்துவருகிறார்கள். #PuliCountDownSTARTS என்கிற ஹேஷ்டேக்கை இந்திய அளவில் ட்ரெண்ட் ஆக்கினார்கள். புலி படத்தின் டீஸர் இன்று இரவு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது வெளியான சில மணி நேரங்களிலேயே வலைஞர்கள் தங்களின் புலி வேட்டையை ( சேட்டையை) ஆரம்பித்து விட்டனர். read more
சர்ச்சையான படத்தில் கிம் காதர்ஷியுடன் நடிக்கிறார் தனுஷ்?
தனுஷின் புகழ் தற்போது இந்திய அளவில் தெரிய ஆரம்பித்து விட்டது, கோலிவுட், பாலிவுட் என பிரபலமடைந்த இவர் தற்போது ஹாலிவுட் ஹீரோயினுடனும் நடிக்கப்போகிறாராம்.
இயக்குனர் பைசல் இயக்கத்தில், தி அடல்ட்ஸ் ஒன்லி என்ற படத்தில் தனுஷ் நடிக்கவிருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிரபல ஹாலிவுட் நடிகை கிம் காதர்ஷி நடிக்கவிருக்கின்றாராம். படத்தின் தலைப்பே சர்ச்சையாக இருப்பதால், இப்படத்தின் கதை எப்படி இருக்கும் என தற்போதே எல்லோரும் எதிர்ப்பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

படப்பிடிப்பில் அஜித்திற்கு விபத்து- தல எடுத்த அதிரடி முடிவு
ஆரம்பம் படத்தின் போது ஏற்பட்ட காயத்திற்கு இன்னும் சிகிச்சை பெறாமல் இருக்கிறார் அஜித். இதை தொடர்ந்து தல-56 படத்திலும் சண்டைக்காட்சியில் அஜித்திற்கு அடிப்பட்டுள்ளது.
இதனால், படப்பிடிப்பை ரத்து செய்யலாம் என படக்குழு முடிவு செய்ததாம். ஆனால், அஜித் இதற்கு மறுத்து விட்டாராம்.
ஏனெனில் அன்றைய நாள் படப்பிடிப்பில் ரத்து செய்தால் பல லட்சம் ரூபாய் வீணாக போய் விடும் என வலியை பொறுத்து கொண்டு நடித்து கொடுத்தாராம்.

Subscribe to:
Comments (Atom)

