நாளை ஜுன் 22ம் தேதி இளைய தளபதி பிறந்தநாளை கொண்டாட ரசிகர்கள் தயார் ஆகி வருகின்றனர். இந்நிலையில் தற்போதே பல இடங்களில் போஸ்டர், பேனர் என கலை கட்ட ஆரம்பித்துள்ளது. இந்த 41 வருடத்தில் இளைய தளபதி தன் திரைப்பயணத்தில் கடந்த வந்த பாதை தான் இந்த பகுதி.
விஜய் தன் திரைபயணத்தில் முதன் முறையாக தன் தந்தை இயக்கத்தில் நாளைய தீர்ப்பு படத்தில் காலடி எடுத்து வைத்தார். இதை தொடர்ந்து ஒரு தனி நடிகராக விஜய் வெற்றி பெற மிகவும் சிரமங்களை சந்தித்தார். ஆரம்பத்தில் இவர் நடித்த பல படங்கள் பிளாப்பையே கொடுத்தன.
இதை தொடர்ந்து விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த பூவே உனக்காக படம் தான் இவரின் திரைப்பயணத்தில் மாபெரும் வெற்றி பெற்ற படம். இப்படத்திற்கு பிறகு பல பெண்களின் மனதை விஜய் கொள்ளையடித்தார்.
பிறகு லவ்டுடே, துள்ளாத மனமும் துள்ளும், பத்ரி, ப்ரியாமனவளே, காதலுக்கு மரியாதை, குஷி போன்ற தொடர் வெற்றியினால் இளைஞர்களின் மனதை கொள்ளையடித்தார். இதுநாள் வரை காதல் நாயகனாக வலம் வந்த விஜய் பகவதி படத்தில் ஆக்ஷன் அவதாரம் எடுக்க, இந்த முடிவு அவருக்கு தோல்வியை தான் கொடுத்தது.
ஆனால், தன் விடா முயற்சியால் திருமலை படத்தின் மூலம் தன்னை ஒரு முழு நீள ஆக்ஷன் ஹீரோவாக மக்களிடம் நிரூபித்தார். இந்த வெற்றி கில்லி, திருப்பாச்சி, சிவகாசி, மதுர என பல வெற்றிகளாக தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸின் செல்லப்பிள்ளையாக இடம்பிடித்தார்.
ஆனால், இவர் எடுத்த சில தவறான முடிவுகள் நல்ல உயரத்தில் இருக்கும் போது தொடர்ந்து 5 படங்கள் தோல்வியை காண வைத்தது. வழக்கம் போல் தன் உழைத்திடு உயர்ந்திடு என்ற தன் கொள்கையின் மூலம் துப்பாக்கியின் மூலம் இந்திய சினிமாவில் ஆச்சரியத்தில் பார்க்கும் வெற்றியை கொடுத்தார். இந்த வெற்றிநாயகனிற்கு எமது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
No comments:
Post a Comment