Saturday, June 20, 2015

இளையதளபதி விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல்

நாளை ஜுன் 22ம் தேதி இளைய தளபதி பிறந்தநாளை கொண்டாட ரசிகர்கள் தயார் ஆகி வருகின்றனர். இந்நிலையில் தற்போதே பல இடங்களில் போஸ்டர், பேனர் என கலை கட்ட ஆரம்பித்துள்ளது. இந்த 41 வருடத்தில் இளைய தளபதி தன் திரைப்பயணத்தில் கடந்த வந்த பாதை தான் இந்த பகுதி.
விஜய் தன் திரைபயணத்தில் முதன் முறையாக தன் தந்தை இயக்கத்தில் நாளைய தீர்ப்பு படத்தில் காலடி எடுத்து வைத்தார். இதை தொடர்ந்து ஒரு தனி நடிகராக விஜய் வெற்றி பெற மிகவும் சிரமங்களை சந்தித்தார். ஆரம்பத்தில் இவர் நடித்த பல படங்கள் பிளாப்பையே கொடுத்தன.
இதை தொடர்ந்து விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த பூவே உனக்காக படம் தான் இவரின் திரைப்பயணத்தில் மாபெரும் வெற்றி பெற்ற படம். இப்படத்திற்கு பிறகு பல பெண்களின் மனதை விஜய் கொள்ளையடித்தார்.
பிறகு லவ்டுடே, துள்ளாத மனமும் துள்ளும், பத்ரி, ப்ரியாமனவளே, காதலுக்கு மரியாதை, குஷி போன்ற தொடர் வெற்றியினால் இளைஞர்களின் மனதை கொள்ளையடித்தார். இதுநாள் வரை காதல் நாயகனாக வலம் வந்த விஜய் பகவதி படத்தில் ஆக்‌ஷன் அவதாரம் எடுக்க, இந்த முடிவு அவருக்கு தோல்வியை தான் கொடுத்தது.
ஆனால், தன் விடா முயற்சியால் திருமலை படத்தின் மூலம் தன்னை ஒரு முழு நீள ஆக்‌ஷன் ஹீரோவாக மக்களிடம் நிரூபித்தார். இந்த வெற்றி கில்லி, திருப்பாச்சி, சிவகாசி, மதுர என பல வெற்றிகளாக தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸின் செல்லப்பிள்ளையாக இடம்பிடித்தார்.
ஆனால், இவர் எடுத்த சில தவறான முடிவுகள் நல்ல உயரத்தில் இருக்கும் போது தொடர்ந்து 5 படங்கள் தோல்வியை காண வைத்தது. வழக்கம் போல் தன் உழைத்திடு உயர்ந்திடு என்ற தன் கொள்கையின் மூலம் துப்பாக்கியின் மூலம் இந்திய சினிமாவில் ஆச்சரியத்தில் பார்க்கும் வெற்றியை கொடுத்தார். இந்த வெற்றிநாயகனிற்கு எமது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

அஜித்தின் ஒரு வார்த்தையால் என் வாழ்க்கை மாறியது – ராகவா லாரன்ஸ்!



விஜய்யின் புலியை விரட்டி விரட்டி வேட்டையாடும் வலைஞர்கள்

வேணும் விட்ரு... அழுதுருவேன் என்று வடிவேலு பாணியில் சொன்னால் கூட விடமாட்டார்கள் போல் இருக்கிறது டுவிட்டர்வாசிகள். புலி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகியுள்ளதற்கு #PuliMemes போட்டு கலாய்த்து வருகின்றனர் வலைஞர்கள். 

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் புலி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.நேற்று இணையத்தில் வெளியான இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை விஜய் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்துடன் ரீட்வீட் செய்துவருகிறார்கள். #PuliCountDownSTARTS என்கிற ஹேஷ்டேக்கை இந்திய அளவில் ட்ரெண்ட் ஆக்கினார்கள். புலி படத்தின் டீஸர் இன்று இரவு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது வெளியான சில மணி நேரங்களிலேயே வலைஞர்கள் தங்களின் புலி வேட்டையை ( சேட்டையை) ஆரம்பித்து விட்டனர். read more

சர்ச்சையான படத்தில் கிம் காதர்ஷியுடன் நடிக்கிறார் தனுஷ்?

தனுஷின் புகழ் தற்போது இந்திய அளவில் தெரிய ஆரம்பித்து விட்டது, கோலிவுட், பாலிவுட் என பிரபலமடைந்த இவர் தற்போது ஹாலிவுட் ஹீரோயினுடனும் நடிக்கப்போகிறாராம்.
இயக்குனர் பைசல் இயக்கத்தில், தி அடல்ட்ஸ் ஒன்லி என்ற படத்தில் தனுஷ் நடிக்கவிருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிரபல ஹாலிவுட் நடிகை கிம் காதர்ஷி நடிக்கவிருக்கின்றாராம். படத்தின் தலைப்பே சர்ச்சையாக இருப்பதால், இப்படத்தின் கதை எப்படி இருக்கும் என தற்போதே எல்லோரும் எதிர்ப்பார்க்க ஆரம்பித்து விட்டனர்.
சர்ச்சையான படத்தில் கிம் காதர்ஷியுடன் நடிக்கிறார் தனுஷ்? - Cineulagam

படப்பிடிப்பில் அஜித்திற்கு விபத்து- தல எடுத்த அதிரடி முடிவு


ஆரம்பம் படத்தின் போது ஏற்பட்ட காயத்திற்கு இன்னும் சிகிச்சை பெறாமல் இருக்கிறார் அஜித். இதை தொடர்ந்து தல-56 படத்திலும் சண்டைக்காட்சியில் அஜித்திற்கு அடிப்பட்டுள்ளது.
இதனால், படப்பிடிப்பை ரத்து செய்யலாம் என படக்குழு முடிவு செய்ததாம். ஆனால், அஜித் இதற்கு மறுத்து விட்டாராம்.
ஏனெனில் அன்றைய நாள் படப்பிடிப்பில் ரத்து செய்தால் பல லட்சம் ரூபாய் வீணாக போய் விடும் என வலியை பொறுத்து கொண்டு நடித்து கொடுத்தாராம்.
படப்பிடிப்பில் அஜித்திற்கு விபத்து- தல எடுத்த அதிரடி முடிவு - Cineulagam

நயன்தாரா எடுத்த துணிச்சல் முடிவு?


நயன்தாரா கையில் தற்போது அரை டஜன் படங்கள் இருக்கும், அதில் ஒன்று தான் மாயா. இப்படம் திகில் கலந்த பேய் படமாக வரவுள்ளது.
இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்தது, இதில் ஒரு குழந்தைக்கு தாயாக நயன்தாரா நடிக்கின்றார்.
இதற்கு முன் என்னை அறிந்தால் படத்தில் த்ரிஷா நடித்திருந்தாலும், அது கௌதம் மேனன் போன்ற ஒரு பிரபல இயக்குனர் படம் என்பதால் தான் இருக்கும். ஆனால், ஒரு சிறு பட்ஜெட் படத்தின் நயன்தாரா நடித்திருப்பது ஆச்சரியம் தான்.
நயன்தாரா எடுத்த துணிச்சல் முடிவு? வீடியோ - Cineulagam

வடிவேலுவிற்கு ஏற்பட்ட அவமானம்


வடிவேலு தற்போதெல்லாம் எந்த விதமான சர்ச்சைகளிலும் சிக்காமல் இருக்கிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் எலி.
இப்படத்தின் பத்திரிக்கையாளர் காட்சி நேற்று திரையிடப்பட்டது. படத்தை பார்த்த யாருமே சிரிக்கவில்லை, எல்லோரும் இது வடிவேலு தானா? என ஆச்சரியத்தில் உறைந்தனர்.
படம் முடிந்த பிறகு வடிவேலு மேடையேறி ‘படம் எப்படிண்ணே இருக்கு’ என கேட்க, யாருமே பதில் கூறவில்லை, உடனே நிலவரத்தை அறிந்து வடிவேலு கிளம்பிவிட்டார். இதுநாள் வரை வேறு எந்த படத்திற்கு இப்படி நடந்தது இல்லையாம்.
வடிவேலுவிற்கு ஏற்பட்ட அவமானம் - Cineulagam

புலி டீசர் எப்படியிருக்கும்? தயாரிப்பாளர் கூறிய தகவல்

புலி படத்தின் டீசரை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். இப்படத்தின் டீசர் நள்ளிரவு 12 மணிக்கு வரும் என கூறப்படுகின்றது.

இந்நிலையில் புலி படம் குறித்து அதன் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷிபு தமீம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளாராம். அதில், ரசல் குரோ நடிப்பில் வெளிவந்த ஹாலிவுட் படமான ‘கிளோடியேட்டர்’ படத்தைப்போல் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த படமாக ‘புலி’ இருக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறாராம்.
இந்த ஆக்‌ஷன் காட்சிகளை டீசரிலேயே ரசிகர்கள் பார்த்து பிரம்மிக்கலாம் என கூறப்படுகின்றது.
புலி டீசர் எப்படியிருக்கும்? தயாரிப்பாளர் கூறிய தகவல் - Cineulagam

செல்வராகவன்-சிம்புவின் கான் படத்தின் கதை கசிந்தது?


செல்வராகவன் எப்படியாவது ஒரு ஹிட் கொடுத்து விட வேண்டும் என போராடிக்கொண்டு இருக்கிறார். இதே நிலையில் சிம்பு இருக்கு, இவர்கள் இருவரும் இணைந்த படம் தான் கான்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளிவந்து பெரிய வரவேற்பு பெற்றது. இதில் சிம்பு முருக பக்தராக இருப்பது போல் வந்தது.
சமீபத்தில் இது தான் கான் படத்தின் உண்மையான கதை என சிலர் கூறி வருகின்றனர். இப்படத்தில் சிம்பு முருக பக்தராக சாதுவாக இருந்தாலும், யாருக்கும் தெரியாத ரகசிய உளவாளியாகவும் வருவாராம்.
சென்னையில் நடக்கவிருக்கு நாச வேலை ஒன்றை சிம்பு எப்படி முறியடிக்கிறார், எதற்காக இந்த இரட்டை வேசம் என்பது தான் சஸ்பென்ஸ். இந்த கதை உண்மையா? அல்லது யாரும் கிளப்பிவிட்டதா? என்று தெரியவில்லை.
செல்வராகவன்-சிம்புவின் கான் படத்தின் கதை கசிந்தது? - Cineulagam

வெளியே தலை காட்டாத விஜய்?


விஜய் தற்போது புலி படத்தின் ரிலிஸில் மிகவும் பிஸியாக இருக்கின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமே சென்னையில் பிரமாண்ட செட் அமைத்தே எடுக்கப்பட்டதாம்.
இவர் புலி படத்திற்கு பிறகு அட்லீ இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜுன் 26ம் தேதி தொடங்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
இப்படம் முழுவதும் அரங்கத்திற்குள் தான் நடைப்பெறுமாம், ஏனெனில் விஜய் போன்ற பெரிய நடிகர்களை வைத்து வெளியே படப்பிடிப்பு நடத்தினால், கூட்டம் கூடி வேறு எந்த பிரச்சனையும் வர கூட என்பதற்காக தானாம்.
வெளியே தலை காட்டாத விஜய்? - Cineulagam

இந்த முறையாவது சிம்புவை, தனுஷ் வீழ்த்துவாரா?


சிம்பு, தனுஷ் என இருவரும் ஒரே நேரத்தில் தான் சினிமாவில் ஹீரோக்களாக காலடி எடுத்து வைத்தனர். இதில் சிம்புவை விட பல மடங்கு உயரத்திற்கு சென்று விட்டார் தனுஷ்.
ஆனாலும், நேரடி மோதலில் இதுவரை சிம்புவை தனுஷ் வெற்றி பெறவில்லை என்பது தான் உண்மை.
இதற்கு முன் புதுக்கோட்டையிலிருந்து சரவணன், கோவில் ஆகிய படத்தின் போதும் சிம்புவிற்கு தான் வெற்றி கிடைத்தது, அதேபோல் ட்ரீம்ஸ், மன்மதன் படத்தின் போது வெற்றி யாருக்கு என்று சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
அதேபோல் தற்போது மீண்டும் மாரி, வாலு மோதலில் யாருக்கு வெற்றி என்பதை காத்திருந்து பார்ப்போம்.
இந்த முறையாவது சிம்புவை, தனுஷ் வீழ்த்துவாரா? - Cineulagam

அடுத்த விஜய், விஷால் தான்- கிளம்பிய புது சர்ச்சை


விஜய் இன்று இந்த உயரத்தில் இருக்கிறார் என்றால் அதற்கு முக்கிய காரணம் அவருடைய ரசிகர்கள் தான். இவர்களை எல்லாம் ஒன்றாக திரட்டி சுமார் 13 வருட காலமாக விஜய்யின் ரசிகர் மன்ற தலைவராக இருந்தவர் ஜெயசீலன்.
இவர் தான் தற்போது விஷாலின் அகில இந்திய ரசிகர்கள் மன்ற தலைவராக பொறுப்பேற்றுள்ளார். இவர் வந்த சில மாதங்களிலேயே விஷால் மிகவும் சுறுசுறுப்பாக பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.
இந்நிலையில் ஜெயசீலன் கூறுகையில் ‘கண்டிப்பாக இன்னும் சில தினங்களில் விஷாலை, விஜய் உயரத்திற்கு கொண்டு செல்வேன்’ என்று கூறியுள்ளாராம்.
அடுத்த விஜய், விஷால் தான்- கிளம்பிய புது சர்ச்சை - Cineulagam

தல படத்தின் தீம் மியுஸிக் எப்படி வந்துள்ளது- சொல்கிறார் பிரபல நடிகர்


அஜித் படங்கள் என்றாலே அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்ப்பது தீம் மியுஸிக் (Theme Music) தான். பில்லா, பில்லா-2, மங்காத்தா, ஆரம்பம், என்னை அறிந்தாலை தொடர்ந்து தல-56 படத்திலும் அனைவரும் தீம் மியுஸிக்கை எதிர்ப்பார்த்து வருகின்றனர்.

இப்படத்திற்கு அனிருத் தான் இசை என்பது நாம் அனைவரும் அறிந்ததே, இதே படத்தில் மங்காத்தா படத்தில் அஜித்துடன் நடித்த அஸ்வின் நடிக்கின்றார்.
இவர் தன் பேஸ்புக் பக்கத்தில் ‘தல படத்தில் நடிப்பது மிகவும் சந்தோஷமாக உள்ளது, சிவா ஒவ்வொரு காட்சியையும் ரசிகர்களுக்கு விருந்து படைப்பது போல் எடுத்து வருகிறார், படத்தின் தீம் மியுஸிக்ல் செம்ம தெறி’ என்று கூறியுள்ளார்.
தல படத்தின் தீம் மியுஸிக் எப்படி வந்துள்ளது- சொல்கிறார் பிரபல நடிகர் - Cineulagam

வசூலில் காக்கா முட்டை எட்டிய மைல் கல்

தமிழ் சினிமாவின் மைல் கல்லாக கருதப்படும் படம் காக்கா முட்டை, பெரும்பாலும் இதுபோன்ற படங்கள் ரசிகர்களை பெரிதாக பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்வது இல்லை.

ஆனால், இப்படம் வெளிவந்த இரண்டு வார முடிவில் ரூ 10 கோடி வரை இப்படம் வசூல் செய்துள்ளது.

இப்படத்தின் பட்ஜெட்டை ஒப்பிடுகையில் வசூலில் இப்படம் மிகப்பெரிய லாபத்தை தந்துள்ளதாம்.
வசூலில் காக்கா முட்டை எட்டிய மைல் கல் - Cineulagam